upcoming tn assembly election, election campaign cm palanisamy

தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரையை தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் தொடங்கினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

Advertisment

பரப்புரையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கண்ட கனவை நிறைவேற்றி வருகிறேன். சோதனைகளைக் கடந்து சிறப்பான ஆட்சியைக் கொடுத்து வருகிறோம். தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். அனைத்து மாநில முதல்வர்கள் முன்னிலையில் தமிழக அரசை பிரதமர் பாராட்டினார். அ.தி.மு.க. அரசின் தீவிர நடவடிக்கையால் கரோனா தொற்று பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் கரோனா இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தடுப்பு அணைகளைக் கட்டி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Advertisment

upcoming tn assembly election, election campaign cm palanisamy

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் அரசாக அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. சட்டமன்றத் தேர்தலில் மக்களின் ஆதரவோடு அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெறும். நீர்மேலாண்மை திட்டத்தில் மழைநீரை சேகரித்த காரணத்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

எடப்பாடி என்பது அ.தி.மு.க.வின் எஃகு கோட்டை; 43 ஆண்டுகளாக வேறு யாரும் வெற்றி பெற்றதே கிடையாது. கனிமொழி பரப்புரையை எடப்பாடியில் தொடங்கினாலும் தி.மு.க.வின் வெற்றி பகல் கனவாகவே இருக்கும். கனிமொழி மட்டுமல்ல தி.மு.க.வின் யார் பரப்புரை செய்தாலும் வெற்றி பெற முடியாது. முதலமைச்சர் என்ற பதவி கடவுள் அருளால் எனக்கு கிடைத்தது. முதலமைச்சர் ஆக வேண்டும் என்று ஒருநாளும் எண்ணியது கிடையாது" என்றார்.

Advertisment