
தீண்டாமை எனும் கொடுமைக்கு ஆளானோரிடம் அன்பு செலுத்தியதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு இல்லாதது, தனக்கு வேண்டியதில்லை என்று கூறி, தான் அணிந்திருந்த பூணூலை அறுத்தெறிந்த, மீசைகவிஞன் பாரதியின்பிறந்த நாளில், இப்படி ஒரு தீண்டாமைக் கொடுமை சம்பவம் நிகழ்ந்துள்ளது பெரம்பலூரில்.
பெரம்பலூர்மாவட்டம், சிறுகுடல்கிராமத்தில் வசித்துவந்த பட்டியல் இனச்சிறுவர்கள் 3 பேர் அங்குள்ள புறம்போக்கு நிலத்தில், மலஜனம் கழித்துள்ளனர். இதனைக் கண்ட சிலம்பரசன்,அபினேஷ், செல்வகுமார் என்ற மாற்றுச் சமூகத்தைச்சேர்ந்த மூன்று இளைஞர்கள், பட்டியலினச்சிறுவர்களை அழைத்துக் கண்டித்ததோடு, அவர்களது மலத்தை அவர்களையேஅள்ளச் சொல்லிதுன்புறுத்தியுள்ளனர். அந்த இளைஞர்களின் வற்புறுத்தலால் சாக்குப் பையைக் கொண்டுஅந்த மூன்று சிறுவர்களும் மலத்தை அள்ளினர்.
இதனைக்கண்டு அதிர்ந்தசிறுவர்களின்உறவினர்கள் அந்தக் காட்சிகளைப் படம்பிடித்தனர். பின்னர், இச்செயலில் ஈடுபடவைத்த நபர்களை, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து, நேரில்வந்தகாவல் கூடுதல் கண்காணிப்பாளர்கார்த்திகேயன், உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறிய பிறகே மக்கள் கலைந்துசென்றனர்.தீண்டாமையின் உச்சமாக நிகழந்தஇந்தச் சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)