Advertisment

'இரவு 1 மணி வரை' -6 மாவட்டங்களுக்கு வெளியான அப்டேட்

 'Until 1 am' - Update released for 6 districts

Advertisment

தமிழகத்தில் வரும் 27ஆம் தேதி முதல் ஒன்றாம் தேதி வரை மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மைய அறிவித்தபடி வரும் 27ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் 28ஆம் தேதி கன மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

அதேபோல மார்ச் ஒன்றாம் தேதி அன்று கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படியாக தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மஞ்சள் நிற எச்சரிக்கை விடுப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisment

இந்நிலையில் தமிழகத்தில் இரவு ஒரு மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மற்றும் புதுவையில் மாநிலம் காரைக்காலில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

midnight Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe