ADVERTISEMENT

கோரிக்கையற்றுக் கொட்டும் குற்றால அருவி... தடையை நீக்கக்கோரி தி.மு.க மனு!

11:05 PM Nov 18, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

வடகிழக்குப் பருவமழை காரணமாக, கடந்த சில நாட்களாக தென்மாவட்டத்தில் பரவலாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

கடந்த ஜூன் மாத கோடை சீசனான, தென் மேற்குப் பருவக் காற்றின் விளைவாய், குறிப்பாக தென்காசி மாவட்டத்தின் குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் வழக்கம் போல, சீசன் காரணமாக தண்ணீர் கொட்டியதையும், தற்போதைய கால மழையினால் குற்றால அருவிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்துக் கோரிக்கையற்றுக் கொட்டுவதையும் ஏற்கனவே நக்கீரன் இணையதளம் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், லாக்டவுன் காரணாமாக சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் வருகை முற்றிலும் தடைபட்டது. மேலும், குளிப்பதற்கான தடையினால், சீசனை நம்பியுள்ள அரசு மற்றும் தனியார் வியாபாரிகளின் ஒட்டு மொத்த வருமானமும், கடந்த 9 மாதமாகப் பாதித்ததால், சுமார் 50 கோடிக்கும் மேலான வர்த்தகம் சீர்கெட்டுப் போனதையும், அதனை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரம் அதல பாதாளத்திற்குப் போனதையும் வெளிப்படுத்தியிருந்தோம்.


இதனையும் கருத்தில் கொண்டு, தற்போது தொற்றுப் பரவல் குறைந்து வருவதால், அனைத்துப் பகுதிகளுக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று வர அரசு அனுமதித்தது போன்று குற்றாலத்திற்கும் பயணிகள் சென்று வருவதற்கான அனுமதி கேட்டும், தடையை நீக்கவும், வியாபாரம் சீரடையவும் வலியுறுத்தி தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க சிவபத்மநாபன், தென்காசி புதிய ஆட்சியர் சமீரனிடம் மனு கொடுத்திருக்கிறார்.

அவருடன் தி.மு.க வடக்கு மாவட்டச் செயலாளர் துரை உள்ளிட்ட பிற அணியினரும் இதனை வலியுறுத்திப் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT