ADVERTISEMENT

வாகன உரிமையாளர்களை மிரட்டும் பள்ளிக்கொண்டா சுங்கச்சாவடி-கண்டுகொள்ளாத அதிகாரிகள்

08:24 PM Jan 10, 2020 | kalaimohan

சென்னை டூ பெங்களுரூ தேசிய நாற்கர நெடுஞ்சாலையில் வேலூர் – மாதனூர் இடையே பள்ளிக்கொண்டா என்கிற இடத்தில் தனியார் நிறுவன பராமரிப்பில் ஒரு டோல்கேட் உள்ளது. சென்னை டூ பெங்களுரூ, கொங்கு பகுதிக்கு செல்லும் முக்கிய சாலை என்பதால் இந்த சாலை எப்போதும் பிஸியாகவே இருக்கும்.

ADVERTISEMENT


இந்த சாலையில் பல ஆண்டுகளாக அந்த தனியார் நிறுவனம் சுங்ககட்டணம் வசூலித்துவருகிறது. தற்போது பாஸ்டேக் என்கிற முறைப்படி சுங்கச்சாவடியில் நின்று பணம் செலுத்த தேவையில்லை. வாகன உரிமையாளர்கள் பாஸ்டேக் வைத்திருந்தால் சுங்கச்சாவடியை வாகனம் கடக்கும்போது லேசர் முறையில் சுங்கச்சாவடியில் உள்ள கணிப்பொறி வாகன எண்ணை ஸ்கேன் செய்து, தொகையை கழித்துக்கொள்ளும். இதனால் சுங்கச்சாவடியில் வாகனங்கள் நிற்கவேண்டிய அவசியம் கிடையாது.

இந்த பாஸ்டேக் முறை ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்படும் என இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவித்தது. பாஸ்டேக் வைத்துள்ள கார்களுக்கு தனி வழி, பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு தனி வழி என்றும். பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு கூடுதல் தொகை வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. வாகன உரிமையாளர்கள் முழுமையாக இன்னும் பாஸ்டேக் வாங்கவில்லை என்பதால் ஜனவரி 15ந்தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பள்ளிக்கொண்டா சுங்கச்சாவடியில் பாஸ்டேக் வாகனங்களுக்கு 2 வழியும், பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு ஒருவழியும் என பிரித்து அதன்படியே வாகனங்கள் அனுமதிக்கிறார்களாம். இதனால் இந்த சாலையில் பெரியளவில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதுப்பற்றி வாகன ஓட்டிகள் அல்லது வாகன உரிமையாளர்கள் கேள்வி எழுப்பினால் சுங்கச்சாவடி ஊழியர்கள் மிரட்டுகிறார்களாம்.

ADVERTISEMENT


இதுப்பற்றி சில வாகன உரிமையாளர்கள் சுங்கசாவடியை பராமரிக்கும் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், வேலூர் மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் சொல்ல அதிகாரிகளுக்கு போன் செய்தால் யாரும் போன் எடுப்பதில்லையாம். ஜனவரி 15வரை பாஸ்டேக்குக்காக மாற்றப்பட்ட வழியிலும் பாஸ்டேக் இல்லாத வாகனங்கள் செல்லலாம் என மத்தியரசு அறிவித்தும் இவர்கள் அதனை ஏற்க மறுக்கிறார்கள், இதுப்பற்றி புகார் சொல்லலாம் என்றாலும் அதிகாரிகள் போனை எடுப்பதில்லை என புலம்புகின்றனர்.

பொங்கல் வருகிறது, சென்னை, பெங்களுரூவில் இருந்து அதிக வாகனங்கள் இந்த சாலையில் பயணிக்கும் நிலையில் உள்ளது. இந்த நேரத்தில் வாகன நெரிசல் ஏற்பட்டால் நேரம் தான் விரையமாகும். கண்டுக்கொள்வார்களா சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ?

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT