ADVERTISEMENT

பொறுப்பற்ற பொதுப்பணித்துறை.. உயிர் பலிக்குக் காத்திருக்கும் வகுப்பறைகள்...!!!

01:07 PM May 19, 2019 | kalaimohan


சாதாரண மழைக்கே புதிதாகக் கட்டப்பட்டுவரும் பள்ளிச் சுற்றுசுவர் சின்னபின்னமாகி இடிந்து விட, அதே ஒப்பந்தகாரர்களால் கட்டப்பட்டு வரும் வகுப்பறைகளின் தரமும், அதில் கல்விப் பயிலக் காத்திருக்கும் மாணக்கர்களின் உயிர்ப் பாதுகாப்பிற்கும் யார் உத்திரவாதம்.? என கேள்வியெழுப்பியுள்ளனர் சம்பந்தப்பட்ட கிராமத்து மக்கள்.

ADVERTISEMENT




ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியிலுள்ளது 312 மாணக்க, மாணக்கியர்கள் பயிலும் அரசு மேல் நிலைப்பள்ளி. இந்தப் பள்ளியில் போதுமான வகுப்பறைகள் இல்லாததால் நபார்டு திட்டத்தின் கீழ் தரைத்தளத்தில் 4 வகுப்பு அறைகளும், அதனின் மேல் தளத்தில் 4 வகுப்பறைகளுமாக மொத்தம் 8 வகுப்பறைகளும், மாணவர், மாணவிகளுக்கென 2 கழிப்பிட அறைகள் மற்றும் பள்ளி வளாகத்தைச் சுற்றி சுற்றுசுவர் வளாகமும் பொதுப்பணித்துறையினர் மேற்பார்வையில் கட்டித் தர ரூ.2 கோடியே 1லட்சத்து 26 ஆயிரம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தை ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த கே.வி.கே.நிறுவனம் எடுத்தது. அதன் படி கடந்த மூன்று மாதங்களாக பள்ளியில் கட்டிடப்பணி நடைப்பெற்று வருகின்றது. இந்தக் கட்டிடப் பணியை தினசரி பார்வையிட பொதுப்பணித்துறையின் 4 பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று பெய்த சாதரண மழையில் 6 அடி உயரமும், 80 அடி நீளமும் கொண்டுக் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.



இதுப்பற்றி பேசும் பொழுது, " கட்டிடப் பணியின் போது தினசரி தண்ணீர் விட வேண்டும். ஆனால் இங்கு தண்ணீர் விடுவதில்லை. வெறுமனே பூச்சு மட்டும் செய்துவிட்டால் என்ன பிரயோசனம்.? இதைக் கண்காணிக்க பொறியாளர்கள் இருந்தாலும் பெரும்பாலும் யாரும் வருவதில்லை. காம்ப்சுவண்ட் சுவரின் நிலையே இப்படியென்றால் வகுப்பறைகளின் தரம் என்னாவது.? குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகின்றது. பொதுப்பணித்துறை கவனம் செலுத்தினால் நல்லது." என்கின்றனர் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர்.



பொதுப்பணித்துறையின் எஸ்.டி.ஓ-வான கண்ணனோ, " சார்.!!! விழுந்த சுவரைத் தானேக் கட்டிக் கொண்டிருக்கின்றோம்." என்றவரிடம், இப்படிப் பொறுப்பற்றப் பதிலால் மாணாக்கர்களின் பாதுகாப்பு என்னாவது.? என்றோம். லைனைக் கட் செய்து விட்டார் அவர். மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்துமா.?

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT