Unmarried frustration youth lost their life

Advertisment

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா உதயன்தாங்கல் பகுதியை சேர்ந்த மணி மகன் பார்த்திபன். இவர்ஈரோடு மாவட்டம் மூங்கில்பாளையம் வெள்ளக்கரடு பகுதியில் உள்ள மலை முருகன் கோவிலில் தங்கி டைல்ஸ் ஒட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். 30 வயதை கடந்த பார்த்திபனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இதனைத் தொடர்ந்து திருமணம் குறித்த ஏக்கத்தில் இருந்த பார்த்திபன் நேற்று முன்தினம் மாலை முருகன் கோவில் அருகே மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்ததகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அம்மாபேட்டை போலீசார் பார்த்திபனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப் பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.