தமிழக காவல்துறையின் தலைமையகமான டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அந்த மின்னஞ்சலில் பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட சென்னையின் 30 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாகத்தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டுகளைச் செயலிழக்க வைக்க,நிபுணர்கள் தற்போது பெசன்ட் நகர் கடற்கரைக்கு விரைந்துள்ளனர். மேலும் டிஜிபி அலுவலகத்துக்கு வந்த மின்னஞ்சலை அடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணைமேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் காவல்துறையினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.