Advertisment

'இவர் பெயரிலும் ஒரு பல்கலைக்கழகம் வேண்டும்' - கணித மேதை பிறந்தநாளில் எழுந்த கோரிக்கை

 'A university should be named after him' - a request on the birthday of the math genius

Advertisment

கணித மேதை ராமானுஜம் பிறந்தநாள் விழவையொட்டி ஈரோட்டில் அருடைய சிலைக்கு வரி செலுத்துவோர் சங்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

கணித மேதை ராமானுஜம் பிறந்த ஊர் ஈரோடு. இங்குள்ள கோட்டை என்ற பகுதியில் வரி செலுத்துவோர் சங்க செயலாளர் ந. பாரதி தலைமையில் செல்வராஜ், சுரேஷ் பூபதி, சக்திவேல், ஆசிரியர் ராமானுஜம், நுகர்வோர் மையம் முன்னாள் செயலாளர் எம். பலசுப்பிரமணியம், முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது. கணித மேதை ராமானுஜம் பிறந்த ஈரோட்டில் அவர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். ஈரோடு சம்பத் நகர் டிஜிட்டல் நூலகத்திற்கு கணித மேதை பெயரிட வேண்டும். ஈரோடு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கணித பூங்கா அமைக்க வேண்டும்' என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe