Skip to main content

‘பல்கலைக்கழகம் பாலியல் துன்புறுத்தலுக்கான இடம் அல்ல!’ -சபல பேராசிரியர்களுக்கு சாட்டையடி!

Published on 31/08/2019 | Edited on 31/08/2019

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் கர்ணமகாராஜன், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் கோவிந்தராஜ், சென்னை லயோலா கல்லூரி தமிழ்த்துறை தலைவர் ராஜராஜன், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி உதவி பேராசிரியர் கந்தசாமி, திருவண்ணாமலை – வாழவச்சனூர் அரசு வேளாண் கல்லூரி உதவி பேராசிரியர் தங்கபாண்டியன், கரூர் அரசு கலைக்கல்லூரி பொருளியல் துறை தலைவர் இளங்கோவன் என பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளானவர்கள் மற்றும்  நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களின் பட்டியல் நீளமானது. 

 

University is Not a Place for Sexual Harassment!- Circular of the University of Madras


ஆராய்ச்சி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு பேராசிரியர்களால் பாலியல் தொல்லைகள் தொடரும் நிலையில், சென்னை பல்கலைக்கழகம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது.

அதில், பல்கலைக்கழக வளாகத்தை பாலியல் துன்புறுத்தலற்ற இடமாக மாற்றுவதற்கு தீவிர கவனம் செலுத்தப்படுகிறது. பல்கலைக்கழகம் என்பது அறிவுசார் இடமே தவிர, பாலியல் துன்புறுத்தலுக்கான இடம் கிடையாது. அதுபோன்ற செயல்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும். பாதிக்கப்படும் மாணவிகள்,  பல்கலைக்கழக பேராசிரியை ரீட்டா ஜான் தலைமையில் இயக்கும் குழுவினரிடமோ, பதிவாளரிடமோ, துணை வேந்தரிடமோ, தங்களது புகாரை எழுத்துபூர்வமாக அளிக்கலாம். மேலும், மாணவர்கள் அல்லது பேராசிரியர்கள் மாணவிகளிடமோ,  மற்ற பெண்களிடமோ பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டால், பாதிக்கப்பட்டவர்கள் துணைவேந்தர் அறைக்குச் சென்று புகார் அளிக்க வேண்டும். உடனே நடவடிக்கை எடுக்கப்படும். 

 

 University is Not a Place for Sexual Harassment!- Circular of the University of Madras

 

மாணவியரைத் தங்கள் வீடுகளுக்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள் அழைக்கக்கூடாது. அதுபோன்ற நடவடிக்கை பாலியல் துன்புறுத்தல் சட்டத்தின் அடிப்படையில் ஒழுங்கீனமாகக் கருதப்படும். பேராசிரியர்களின் வீடுகளில் மாணவிகள் தங்கக்கூடாது. பேராசிரியர்கள் தலைமையில் தனிப்பட்ட கல்விச் சுற்றுலா எதுவும் செல்லக்கூடாது. அவ்வாறு செல்ல வேண்டுமென்றால், பல்கலைக்கழகத்திடம் சிறப்பு அனுமதி பெறவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இனியாவது பல்கலைக்கழகங்களில் பாலியல் தொல்லை என்ற பேச்சுக்கே இடம் தராமல் நல்லொழுக்கம் பேணப்பட்டால் சரிதான்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கிம் ஜாங் உன் போட்ட திடீர் உத்தரவு; மீண்டும் பரபரப்பில் வடகொரியா

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kim Jong Un's sudden order; North Korea is in a frenzy again

அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் நாடுகளுக்கு மத்தியில் எப்போதும் சர்ச்சைக்குள்ளேயே சிக்கி இருக்கும் நாடு வடகொரியா. அதேபோல் சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன். அண்மையில் ஏவுகணைகளை வீசி கொரிய தீபகற்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியவர்.

கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள வடகொரியாவில் வெளியுலகம் தொடர்பான தகவல்களை மக்கள் தெரிந்துகொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வடகொரியாவில் நடக்கும் நிகழ்வுகள் வெளி உலகத்திற்கு கசிந்து விடக்கூடாது எனவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஐ.நா உள்ளிட்ட உலகின் எந்த அமைப்புக்கும் கட்டுப்படாமல் செயல்பட்டு வரும் வடகொரியா அண்டை நாடுகளான ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளை மிரட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணைகளை ஏவி விட்டு பயமுறுத்தி வருகிறது.

இந்நிலையில் போருக்கு எப்போதும் தயாராக இருக்கும்படி வடகொரியா ராணுவத்திற்கு கிம் ஜாங் உன் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 'கிம் ஜாங் உன்-2' என்ற அரசியல் மற்றும் ராணுவத்திற்கான பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து கிம் ஜாங் உன், நம்மைச் சுற்றியுள்ள நாடுகளில் அரசியல் சூழ்நிலை, நிலையாக இல்லாதது குறித்து பேசியதோடு, இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். எப்போதும் இல்லாத அளவிற்கு வடகொரியா ராணுவத்தினர் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 'கிம் ஜாங் உன்-2' பல்கலைக்கழகத்தில் அவர் ஆய்வு செய்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Next Story

சி.ஏ.ஏவை எதிர்த்து சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் (படங்கள்)

Published on 12/03/2024 | Edited on 12/03/2024

 

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) எதிர்த்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், அவர்கள் சி.ஏ.ஏ விளம்பர பதாகைகளைத் தீ வைத்து எரித்தனர்.