
கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் பல்கலைக் கழகங்களில் இறுதித் தேர்வு செப்டம்பர் 15 -க்கு பிறகு நடைபெறும் என உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். இறுதி பருவத் தேர்வுக்கான காலஅட்டவணை, தேர்வு மையங்களில் விரைவில் வழங்கப்படும். இறுதியாண்டுத் தேர்வுமாணவர்கள் நேரில் வந்து எழுதக் கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். மேலும்மாணவர்கள் தேர்வுக்கு தங்களைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டும் எனவும்அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அதேபோல் ஆர்க்கிடெக்சர் எனப்படும் அமைப்பியல் படிப்புகளுக்கான விண்ணப்பம் செப்.7 ஆம் தேதி தொடங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)