University employees stuggle demanding job permanency!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு 205 பேர் தொகுப்பூதிய ஊழியர்களாக பணியமர்த்தப்பட்டனர். இவர்களை இரண்டு ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், 12 ஆண்டுகள் கடந்தும் இன்றுவரை பணிநிரந்தரம் செய்யவில்லை. இது குறித்து பல்வேறு விதமான போராட்டங்கள் நடத்தியும் பயனில்லை.

Advertisment

இந்த நிலையில், கடந்த 27-ந்தேதி முதல் 12 நாட்களாக பல்கலைக்கழக வளாகத்தில் நூதன போராட்டத்தில் இரவு பகல் பாராமல் ஈடுபட்டு வந்தனர். இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால் 13வது நாளான இன்று தொகுப்பூதிய ஊழியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் வேண்டி கைகளில் தமிழக முதல்வர், தமிழக வேளாண்துறை அமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர் படங்களை ஏந்தியவாறு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணிநிரந்தரம் செய்யும் வரை சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

Advertisment