Skip to main content

பல்கலைக்கழகங்கள் இடையே மகளிர் வலைப்பந்து போட்டி: அண்ணாமலை பல்கலைக்கழக அணி வெற்றி!

Published on 17/02/2020 | Edited on 17/02/2020

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அகில இந்திய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மகளிர் வலைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், குஜராத் குருசேத்திரப் பல்கலைக்கழகம், கேரளா மாநிலம் கோழிகோடு பல்கலைக்கழகம், உஸ்மானியா பல்கலைக்கழகம், ராஜஸ்தான் பல்கலைக்கழகம், நாக்பூர் பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம், அப்துல்கலாம் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அகில இந்திய அளவில் 65 பல்கலைக்கழகங்கள் கலந்து கொண்டனர்.

universities  basket ball annamalai university champion

கடந்த 13ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் அனைத்து பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவிகள் கலந்து கொண்டனர் போட்டிகள் காலிறுதி அரையிறுதி என பல்வேறு வகையில் போட்டிகள் நடைபெற்றது. இதில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் அண்ணாமலைப் பல்கலைக்கழக அணி - குருஷேத்ரா பல்கலைக்கழக அணியை (23-13) என்ற கணக்கில் வீழ்த்தி முதலிடத்தில் வெற்றி பெற்றது.

universities  basket ball annamalai university champion

புள்ளிகள் அடிப்படையில் காலிகட் பல்கலைக்கழக அணி இரண்டாம் இடத்தையும், குருஷேத்ரா பல்கலைக்கழகம் மூன்றாம் இடத்தையும், மங்களூர் பல்கலைக்கழக அணி நான்காம் இடத்தையும் பெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி பல்கலைக்கழக விளையாட்டு திடலில் நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக பதிவாளர் கிருஷ்ணமோகன், நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் மனித உரிமை பாதுகாப்பு துறை இயக்குனர் விக்ரமன், அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி துறை இயக்குனர் செல்வம் பயிற்சியாளர் சின்னையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

இளம் வயதில் சாதனை படைத்த செஸ் வீரர் குகேஷ்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Chess player Gukesh who set a record at a young age

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்று தமிழ்நாடு கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சாதனை படைத்துள்ளார்.

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்த தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பாலியல் சமத்துவ பயிற்சி பட்டறை

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Gender Equality Workshop at Annamalai University

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து பாலியல் சமத்துவத்தைப் பற்றிய 3 நாட்கள் பயிற்சி பட்டறை பல்கலைக்கழக மக்களியல் துறையில் நடைபெற்றது. மக்களியல் துறை உதவிப் பேராசிரியர் க. மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். கலைப்புல தலைவர் விஜயராணி தலைமை தாங்கிப் பேசினார். துறைத் தலைவர் ரவிசங்கர் பயிற்சி பட்டறை பற்றிய தொகுப்பு உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆளவை மன்ற உறுப்பினர் பேராசிரியர் அரங்க பாரி, ராஜீவ்காந்தி தேசிய மேம்பாட்டு நிறுவனத்தின் பேராசிரியர் வசந்தி ராஜேந்திரன், சிதம்பரம் வட்டாட்சியர் ஹேமா ஆனந்தி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்குப் பாலியல் சமத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ - மாணவியர்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரி மாணவ - மாணவியர்கள் 100 பேர் கலந்து கொண்டனர். மக்களியல் துறை இணைப் பேராசிரியர் பீமலதா தேவி நன்றியுரை வழங்கினார்.