Advertisment

"தமிழகத்திலும் அதிக இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும்" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேட்டி...

union minister prakash javadekar press meet at chennai

சென்னை கிண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தகவல், ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.

Advertisment

அப்போது அவர் பேசுகையில், "தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் பா.ஜ.க. வெற்றிபெறும் என நம்புகிறோம். மற்றகட்சிகள் குடும்பக் கட்சிகளாக உள்ளன; பா.ஜ.க. மக்கள் நலன்சார்ந்து உள்ளது. நாடு முழுவதும் பா.ஜ.க.வின் வெற்றி அதிகரித்துள்ளது; எல்லா இடங்களிலும் காங்கிரஸுக்கு சரிவுதான். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கவே மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. ஒரு கூட்டணி என்று இருந்தால் அதில் ஒருவரை ஒருவர் சார்ந்திருத்தல் என்பது இயல்பு. அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் மட்டுமல்ல; எந்தக் கூட்டணி என்றாலும் ஒருவரை ஒருவர் சார்ந்தே இருக்க வேண்டும்" என்றார்.

Advertisment

Chennai PRESS MEET UNION MINISTER PRAKASH JAVADEKAR
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe