Union Minister Information about HP Laptop Factory In Sriperumbudur 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கணினி உற்பத்தித் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஹெச்.பி. நிறுவனத்தின் லேப்டாப் தொழிற்சாலை அமைகிறது என ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 3 ஆயிரத்து 380 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த லேப்டாப் தொழிற்சாலை அமைய உள்ளது.

Advertisment

இது தொடர்பாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவிக்கையில், “இந்தியா முழுவதும் உள்ள மின்னணு சாதனங்கள் உற்பத்தி நிறுவனங்களில் சுமார் 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். அந்த வகையில் கணினி உற்பத்தித் துறையில் முன்னணி நிறுவனமான ஹெச்.பி. நிறுவனம் தமிழகத்தில் விரைவில் தனது உற்பத்தியைத் தொடங்குகிறது. இந்த உற்பத்தி ஆலையில் கணினி, மடிக்கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

Advertisment

Union Minister Information about HP Laptop Factory In Sriperumbudur 

உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் இந்த ஆலை அமைய உள்ளது. மின்னணு உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ள பேட்ஜெட் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கும், ஹெச்.பி. நிறுவனத்திற்கும் இடையே இன்று (09.09.20240 கையெழுத்தானது. இந்த தொழிற்சாலையின் வருகையால் சுமார் 1,500 பேர் முதற்கட்டமாக வேலைவாய்ப்பு பெறுவர். அதே சமயம் இங்கு உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க வேலைவாய்ப்பு பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் இந்த ஆலையில் இருந்து வரும் பிப்ரவரி முதல் லேப்டாப் தயாரிக்கப்படும். மின்னணு சாதனங்களின் உற்பத்தியில் வளர்ந்து வரும் தமிழகம் ஏற்றுமதியிலும் முன்னணியில் உள்ளது” எனத் தெரிவித்தார்.