UNION MINISTER ANNOUNCED AWARDS FOR ACTOR RAJINIKANTH

மத்திய சுற்றுச்சூழல் துறை, கனரக தொழில்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "2019ஆம் ஆண்டிற்கான'தாதா சாகேப் பால்கே விருது' இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுகிறது. நடிகர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியர்என அவரது பங்களிப்பு சிறப்பானது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

UNION MINISTER ANNOUNCED AWARDS FOR ACTOR RAJINIKANTH

ஏற்கனவேசிவாஜி கணேசன், இயக்குநர் கே.பாலச்சந்தர், அமிதாப் பச்சன், வினோத் கண்ணா, லதா மங்கேஸ்வர், கன்னட நடிகர் ராஜ்குமார், அடூர் கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கு 'தாதா சாகேப் பால்கே விருது' வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நடிகர் ரஜினிகாந்துக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மத்திய அரசின் பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளை நடிகர் ரஜினிகாந்த் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இந்த விருது குறித்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "51வது 'தாதா சாகேப் பால்கே விருது' நடிகர் ரஜினிக்கு வழங்கப்படும். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கும், ரஜினிக்கு 'தாதா சாகேப் பால்கே விருது' அறிவிக்கப்பட்டதற்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று விளக்கமளித்தார்.

ஆஷா போஸ்லே, மோகன்லால், ஷங்கர் மஹாதேவன், சுபாஷ் கை, பிஸ்வஜீத் சாட்டர்ஜி ஆகியோர் ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கான தேர்வுக் குழுவில் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தாதா சாகேப் பால்கே விருது போன்ற உயரிய கௌரவங்கள் சினிமாவில் இருந்து ஓய்வு பெற்றதற்கே பிறகே பெரும்பாலான நடிகர்களுக்கு கிடைத்துள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் ஆக்ட்டிவாக இருக்கும் போதே பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.