மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகை தர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 27ஆம் தேதி (27.12.2024) தமிழகம் வருகை தர உள்ளார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக 28ஆம் தேதி திருவண்ணாமலை செல்கிறார். அங்குக் கட்டப்பட்டுள்ள திருவண்ணாமலை மாவட்ட பாஜக அலுவலகத்தைத் திறந்து வைக்கிறார். இதனையடுத்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். அதனைத் தொடர்ந்து அன்றைய தினமே டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
அதே சமயம் மத்திய அமைச்சர் அமித்ஷா வருகைக்காக, காவல்துறை தரப்பில் பாதுகாப்புகளை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கவும் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.