Advertisment

ஏடிஜிபி டேவிட்சன் மீது நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

Union Home Ministry directs ADGP Davidson to take action

Advertisment

போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை காவல்துறை ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் இருந்தபோது போலி பாஸ்போர்ட் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்தியன் ரிப்போர்ட்டர் இதழின் ஆசிரியர் வராகி என்பவர் கடந்த மே மாதம் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் வராகி அளித்த புகாரின் அடிப்படையில் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி என்று தமிழக தலைமைச் செயலாளருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. போலி பாஸ்போர்ட் வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருவதாகவும், விரைவில் டேவிட்சனிடமும் விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

உளவுத்துறை டிஜிபி பதவியில் இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதத்தை தமிழக காவல்துறை தலைமையகத்திற்கு மாற்றப்பட்டு நேற்று உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

police tngovt
இதையும் படியுங்கள்
Subscribe