union home minister spoke with amit shah

Advertisment

'புரெவி' புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டு 'புரெவி' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அப்பொழுது தமிழக முதல்வர், 'புரெவி' புயல் குறித்தும், மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விவரித்தார். அப்பொழுது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாட்டிற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்' இவ்வாறு அந்தசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.