தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்திற்கு வழங்கப்பட்டு வந்த 'Y'பிரிவு பாதுகாப்பையும், திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த 'Z'பிரிவு பாதுகாப்பையும் திரும்ப பெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று (09.01.2020) அறிவித்தது.

Advertisment

UNION HOME MINISTER HAS REVOKED CRPF IN STALIN DEPUTY CM

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், எனக்கு சி.ஆர்.பி.எப் பாதுகாப்பு தந்ததற்கு நன்றி; இனி பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்; பல ஆண்டுகளாக எனக்கு பாதுகாப்பு தந்த சி.ஆர்.பி.எப் வீரர்கள் அனைவருக்கும் நன்றி. இவ்வாறு மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

இதனிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், "எனக்கு ஒய் பிரிவு பாதுகாப்பும், ஸ்டாலினுக்கு இசட் பிரிவு பாதுகாப்பும் விலக்கப்பட்டதில் உள்நோக்கமில்லை என்று விளக்கமளித்தார்.