Advertisment

மத்திய குழுவினர் இன்று ஆய்வு!

union government committee inspection at tamilnadu and puducherry over a cyclone

சென்னையில் இரண்டு குழுக்களாக பிரிந்து புயல் மற்றும் மழையால் ஏற்பட்ட சேதங்களை மத்திய குழுவினர் இன்று (06/12/2020) ஆய்வு செய்கின்றனர்.வேளச்சேரி ராம்நகர், பள்ளிக்கரணை, செம்மஞ்சேரி சுனாமி காலனி பகுதிகளில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு செய்கின்றனர். மேற்கண்ட மூன்று இடங்களில் ஆய்வு செய்த பிறகு செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்துடன் ஆலோசிக்கிறது மத்திய குழு.

Advertisment

மகாபலிபுரம் வழியாக இன்று பிற்பகல் புதுச்சேரிக்கு செல்லும் முதல் குழு அங்கு நாளை (07/12/2020) ஆய்வு செய்யவுள்ளது. இரண்டு குழுக்களாக பிரிந்துள்ளமத்திய குழுவினர் வட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ஆய்வு செய்யவுள்ளனர். நாளை (07/12/2020) வேலூர், திருப்பத்தூரில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை சேதங்களை ஆய்வு செய்கிறது மத்திய குழு.

Advertisment

டிசம்பர் 8- ஆம் தேதி வரை தமிழகத்தில் புயல் சேதங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர். டிசம்பர் 8- ஆம் தேதி சென்னையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விட்டு டெல்லி செல்லும் மத்திய குழு, சேதங்களை கணக்கீட்டு மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கும். அதன் பிறகு தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு மத்திய அரசு நிதியை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய குழுவில் யார்? யார்?

மத்திய உள்துறை இணைச் செயலாளர் அசுதோஷ் அக்னிஹோத்ரி தலைமையிலான மத்திய குழுவில் வேளாண் இயக்குநர் மனோகரன், நெடுஞ்சாலைத்துறை மண்டல அலுவலர் ரனஞ்ஜெய்சிங், நிதித்துறை (செலவினம்) பார்த்தெண்டு குமார் சிங், மின்துறை இணை இயக்குநர் சுமன், மீனவள ஆணையர் பால் பாண்டியன், நீர்வள இயக்குநர் ஹர்ஷா, கிராமிய வளர்ச்சி இயக்குநர் தர்மவீர்ஜா ஆகியோர் உள்ளனர்.

cyclone Puducherry Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe