மயிலாப்பூர் மார்க்கெட்டுக்கு சென்று காய்கறிகளை வாங்கிய மத்திய நிதியமைச்சர்! 

Union Finance Minister went to Mylapore market and bought vegetables!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதற்காக தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின், இரவு மைலாப்பூரில் உள்ள மார்க்கெட்டிற்கு சென்றார். பின்பு, அங்கு ஒரு காய்கறிக் கடைக்கு சென்ற நிர்மலா சீதாராமன், வியாபாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகளுடன் கலந்துரையாடி காய்கறிகளையும் வாங்கினார்.

இந்த நிகழ்வின் போது, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினரும், பா.ஜ.க.வின் தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசன் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மத்திய அமைச்சர், மார்க்கெட்டுக்கு நேரில் சென்று காய்கறிகளை வாங்கியது தொடர்பான வீடியோவை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சி ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Chennai Market
இதையும் படியுங்கள்
Subscribe