'Union Chairman, Resolution without confidence in the Deputy Chairman' - Councilors who petitioned the Governor!

கடலூர் மாவட்டம், நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் தற்போது 13 தி.மு.க., 4 அ.தி.மு.க., 2 பா.ம.க., 2 சுயேச்சைகள் என மொத்தம் 21 ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உள்ளனர்.

Advertisment

அ.தி.மு.க. மற்றும் சுயேட்சை உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒன்றிய சேர்மனாக பா.ம.க.வைச் சேர்ந்த செல்வி ஆடியபாதம் தலைவராகவும், அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஜான்சிமேரி தங்கராசன் துணை தலைவராகவும் இருந்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக சேர்மன், துணைச் சேர்மன் ஆகியோர் ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கு நிதிகளைப் பிரித்துக் கொடுக்காமல், தன்னிச்சையாக செயல்பட்டு வருதாகவும், இதனால் பொதுமக்களுக்கு செல்ல வேண்டிய அனைத்து திட்டங்களும் சென்றடையவில்லை. இதன் காரணமாக, அந்தந்தப் பகுதி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும், கூறி பெரும்பாலான ஒன்றியக் குழு உறுப்பினர்கள், ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும், எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருந்து வந்தனர்.

இதனால் ஒன்றிய சேர்மன் செல்வி ஆடியபாதம், துணை சேர்மன் ஜான்சிமேரி தங்கராசன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றக் கோரி, கடந்த ஆண்டு டிசம்பர் 23- ஆம் தேதி அன்று தி.மு.க. ஒன்றியக் குழு உறுப்பினர் முத்துக்கண்ணு தலைமையில் விருத்தாசலம் கோட்டாட்சியர் ராம்குமாரை சந்தித்து, 15 கவுன்சிலர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

Advertisment

அதில், பா.ம.க மற்றும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 2 கவுன்சிலர்கள் மனுவில் கையெழுத்திட்ட கையெழுத்து அவர்களுடையது இல்லையென சர்ச்சையைக் கிளப்பினர். இதனால் நடவடிக்கை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டு, இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து, அந்த கையெழுத்துகள் உண்மையானதா, பொய்யானதா என தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது.

இதனிடையே சுயேச்சை கவுன்சிலர்கள் உட்பட 13 பேர் விருத்தாசலம் கோட்டாட்சியர் ராம்குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அதில் ஒவ்வொரு கவுன்சிலர்களும் தனித்தனியாக கையெழுத்திட்டு மனு அளித்தனர். இதையடுத்து மனுக்களை பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் ராம்குமார் சம்பந்தப்பட்ட சேர்மன், துணைச் சேர்மன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோரிடம் பதில் கேட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.