சமீபகாலமாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளும், கொலைகளும் நாட்டில்அதிகரித்து வரும் நிலையில் இதற்காக ஏற்கனவே போக்ஸோ சட்டமசோதா கொண்டுவரப்பட்டது. இந்த மோசோதாவில் சில கடுமையான தண்டனைகளை விதிக்கக்கூடியசட்டதிருத்தங்கள் செய்யப்பட ஒப்புதல் கோரியிருந்த நிலையில் தற்போது போக்ஸோ சட்டத்திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் குழந்தைகளுக்கு எதிரானபாலியல் வன்கொடுமை வழக்கில் தூக்குத்தண்டனை வரை நிறைவேற்றப்படஇந்த மசோதா வழிவகை செய்யும்.குழந்தைகள் தொடர்பான ஆபாசப்படங்கள் தயாரிப்பது, வெளியிடுவது, அதை வைத்து வர்த்தக நோக்கில் செயல்படுவது என பாலியல் வன்கொடுமை மட்டுமின்றி இதுபோன்ற எந்த செயல்களில் ஈடுபட்டாலும்அதிகப்படியான தண்டனை விதிப்பதற்கும், அபராதம் விதிக்கவும் இந்த சட்டத்திருத்த மசோதா உதவும்.
அதேபோல் குழந்தைகளுக்கு எதிராகபாலியல் வன்கொடுமையில் ஈடுப்பட்டால் உச்சபட்ச தண்டனையாக தூக்குத்தண்டனை விதிக்கவும் இந்த மசோதா வழிவகை செய்யும். போக்ஸோ சட்டம் 2012 பிரிவு 2,4,5,6,9,14,15,34,42,45 இந்த பிரிவுகளின் கீழ்தான் தற்போது சட்டதிருத்தங்கள் மேற்கொள்ள ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.