Skip to main content

போக்சோ புதிய சட்டத்திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல்!

Published on 10/07/2019 | Edited on 11/07/2019

சமீபகாலமாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளும், கொலைகளும் நாட்டில் அதிகரித்து வரும் நிலையில் இதற்காக ஏற்கனவே போக்ஸோ சட்டமசோதா கொண்டுவரப்பட்டது. இந்த மோசோதாவில் சில கடுமையான தண்டனைகளை விதிக்கக்கூடிய சட்டதிருத்தங்கள் செய்யப்பட ஒப்புதல் கோரியிருந்த நிலையில் தற்போது போக்ஸோ சட்டத்திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Union Cabinet approves new posko bill


இதன்மூலம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் தூக்குத்தண்டனை வரை நிறைவேற்றப்பட இந்த மசோதா வழிவகை செய்யும். குழந்தைகள் தொடர்பான ஆபாசப்படங்கள் தயாரிப்பது, வெளியிடுவது, அதை வைத்து வர்த்தக நோக்கில் செயல்படுவது என பாலியல் வன்கொடுமை மட்டுமின்றி இதுபோன்ற எந்த செயல்களில் ஈடுபட்டாலும் அதிகப்படியான தண்டனை விதிப்பதற்கும், அபராதம் விதிக்கவும் இந்த சட்டத்திருத்த மசோதா உதவும். 

அதேபோல் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமையில் ஈடுப்பட்டால் உச்சபட்ச தண்டனையாக தூக்குத்தண்டனை விதிக்கவும் இந்த மசோதா வழிவகை செய்யும். போக்ஸோ சட்டம் 2012 பிரிவு 2,4, 5,6,9,14,15,34,42,45 இந்த பிரிவுகளின் கீழ்தான் தற்போது சட்டதிருத்தங்கள் மேற்கொள்ள ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாநில மகளிர் கொள்கை; தமிழக அமைச்சரவை ஒப்புதல்

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
Tamil Nadu cabinet approves state women  policy

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் துறையின் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் மாநில மகளிர் கொள்கைக்குத் தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்குத் தற்காப்பு கலைகள் பயிற்றுவிக்க வழிவகை செய்கிறது. கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மகளிருக்கு கூடுதலாக 50 நாட்கள் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பதிவு செய்யப்பட்ட கட்சிகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பன போன்ற பல அம்சங்களை உள்ளடக்கிய மாநில மகளிர் கொள்கைக்கு தற்போது அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

மேலும் அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் மற்றும் ஆளுநர் உரை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், கூட்டத்தொடரில் ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

புதிய குற்றவியல் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

Published on 25/12/2023 | Edited on 25/12/2023
President approves 3 new bills

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகிய 3 குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த சட்டங்கள்தான் இப்போது வரை அமலில் இருந்தன. இதற்கிடையே, இவற்றுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு உருவாக்கியது. அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் 3 குற்றவியல் மசோதாக்கள் இந்தியில் மாற்றப்பட்டு தாக்கல் செய்யப்பட்டன.

அதன்படி, இந்திய தண்டனைச் சட்டம் என்பதை பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் எனவும், குற்றவியல் நடைமுறை சட்டம் என்பதை பாரதிய நாகரிக் சுரக்‌ஷ சன்ஹிதா எனவும், இந்திய சாட்சியங்கள் சட்டம் என்பதை பாரதிய சாக்சியா எனவும் பெயர் மாற்றம் செய்ய பரிந்துரைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் 3 மசோதாக்களையும் தாக்கல் செய்தார். அதன் பின்னர், அவை நாடாளுமன்ற ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. நாடாளுமன்ற நிலைக்குழு தனது பரிந்துரைகளை அறிக்கையாக சமர்ப்பித்தது. அந்த பரிந்துரைகள் சேர்க்கப்பட்டு புதிய குற்றவியல் மசோதாக்கள் உருவாக்கப்பட்டன. மேலும், நாடாளுமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள் கடந்த வாரம் வாபஸ் பெறப்பட்டன.

இதையடுத்து, நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைகளுடன் கூடிய புதிய குற்றவியல் மசோதாக்களை மத்திய உள்துறை அமித்ஷா தாக்கல் செய்தார். இந்த மசோதாக்கள் மீதான விவாதம் கடந்த 20 ஆம் தேதி (20-12-23) நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதையடுத்து, மக்களவையில் 3 புதிய குற்றவியல் மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.  அதனைத் தொடர்ந்து இந்த 3 குற்றவியல் மசோதாக்களும் மாநிலங்களவையிலும்  கடந்த 21 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து இந்த  3  புதிய குற்றவியல் மசோதாக்களும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து  3  புதிய குற்றவியல் மசோதாக்களும் தற்போது அமலுக்கு வந்துள்ளன.