Advertisment

நிறைகளும், குறைகளும் இணைந்த பட்ஜெட்- தேமுதிக தலைவர் விஜயகாந்த்!

2020- 2021 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (01/02/2020) மக்களவையில் தாக்கல் செய்தார்.

Advertisment

இந்த பட்ஜெட்டில் வருமான வரி குறைப்பு, நாடுமுழுவதும் உடான் (UDAN)திட்டத்தின்கீழ் புதிதாக 100 விமான நிலையங்கள், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு 30,757 கோடி ரூபாய் ஒதுக்கீடு, புதிய உருவாக்கப்பட்டுள்ள யூனியன் பிரதேசமான லடாக் மேம்பாட்டிற்காக 5958 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. சுமார் 2 மணி 43 நிமிடங்கள் தனது பட்ஜெட் உரையை நிகழ்த்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இதன் மூலம் மிகநீண்ட பட்ஜெட் உரையை வாசித்த இந்திய நிதியமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

union budget 2020 dmdk party vijayakanth

இந்நிலையில் மத்திய பட்ஜெட் குறித்து தேமுதிக தலைவரும், பொதுச்செயலாளரும் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020- 2021 மத்திய பட்ஜெட் நிறைகளும், குறைகளும் சமமாக இருக்கின்ற பட்ஜெட்டாகவே பார்க்க முடிகிறது. வளர்ச்சி என்று பார்த்தால் வருமான வரி விகிதம் குறைப்பு, வீட்டுக் கடன் சலுகை, விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி கடன், வேளாண்மை உள்கட்டமைப்பு, ஜவுளி தொழில்நுட்பம், ஆகியவற்றில் வேலை வாய்ப்பை உருவாக்குவது, விவசாயத்தை இரட்டிப்பாக்குவது, ஏற்றுமதியை ஊக்குவிப்பது என்று பல வரவேற்கக்கூடிய அம்சங்கள் இருக்கும் பொழுதும், பல குறைகளும் இருக்கின்றது, இன்றைய பொருளாதாரத்தின் நிலையை அறிந்து தனிநபரின் வருமானத்தை உயர்த்த கூடிய பொருளாதார வளர்ச்சிக்கான திட்டம் இல்லாதது ஏமாற்றத்தை தருகிறது.

Advertisment

union budget 2020 dmdk party vijayakanth

பல கோடி பேர் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள், இன்னும் பல மடங்கு வேலைவாய்ப்பை உயர்த்துவதற்கு நல்ல செயல் திட்டங்களை அறிவிக்கவில்லை. விவசாயத்திற்கு மிக முக்கிய காரணமாக இருக்கும் நதிகள் இணைப்பு, நதிகள் இணைப்புக்காக எந்த ஒரு அறிவிப்பும் இந்த மத்திய பட்ஜெட் திட்டத்தில் இல்லை, எனவே குறைகளும் நிறைந்திருக்கிறது. மத்திய அரசின் இந்த பட்ஜெட் நிறைகளும், குறைகளும் இணைந்த மத்திய அம்சம் கொண்ட மத்திய பட்ஜெட்டாகவே பார்க்கமுடிகிறது. இவ்வாறு தேமுதிக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

dmdk party union budget 2020- 2021 vijayakanth
இதையும் படியுங்கள்
Subscribe