தமிழகத்தில் பொதுத்தேர்வின்போது தடையற்ற மின்சாரம் வழங்க மண்டல பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை மறுநாள் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து, 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் அடுத்தடுத்து பொதுத்தேர்வு தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், பொதுத்தேர்வின்போது தடையற்ற மின்சாரம் வழங்க மண்டல பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில், "பொதுத்தேர்வு மையங்களில் அதிகாரிகள் முன்கூட்டியே மின்பாதை குறித்து ஆய்வு செய்ய வேண்டும், பொதுத்தேர்வு மையங்களுக்கு அருகேயுள்ள மின்மாற்றிகள் பழுதடைந்திருந்தால் உடனே சரி செய்ய வேண்டும், மின்தடை ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மாற்று வசதியை ஏற்படுத்தி தரவேண்டும்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.