Skip to main content

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சீருடை வழங்கும் நிகழ்ச்சி! 

Published on 12/01/2022 | Edited on 12/01/2022

 

Uniform for Trichy Srirangam Temple workers

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட கோவில் பணியாளர்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு சீருடைகள் மற்றும் புத்தாடைகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்படி இன்று திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் புத்தாடை மற்றும் சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி துவக்கிவைக்கப்பட்டன. இதனை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, தொடங்கி வைத்தார். கோவிலில் பணியாற்றக்கூடிய அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் பழங்கால இந்து கோவில் இடித்து தகர்ப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Demolition of a Historic Hindu temple in Pakistan!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னாள், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையொட்டி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ‘கைபர் கோவில்’ என்ற பழங்கால இந்து கோவில் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் பின்பு, 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னால், அங்குள்ள சிறுபான்மையின மக்களான இந்து மக்கள், இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தனர்.

இதனால், 1947ஆம் ஆண்டு முதல், அந்த இந்து கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் உள்ளே சென்று வழிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த கோவில் மூடப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த கோவிலில் உள்ள செங்கற்கள் ஒவ்வொன்றாக விழுந்து, அந்த கோவில் சிதிலமடைந்து காட்சியளித்துள்ளது.

இந்த நிலையில், அந்தப் பழமையான இந்து கோவில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கூறியதாவது, ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை உறுதி செய்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் பொறுப்பாகும்’ என்று கூறியுள்ளது.

Next Story

“நான் உங்களைப்போன்று எளிய குடும்பத்தில் பிறந்தவன்” - அதிமுக வேட்பாளர் பிரச்சாரம்

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
AIADMK candidate Karupiya is actively campaigning in Trichy

திருச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில்  மாநகர் மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தலைமையில், தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அங்குள்ள மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள், தரைக்கடை வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரையும் நேரில் சந்தித்து தனக்கு ‘இரட்டை இலை’ சின்னத்தில் ஓட்டளிக்க வலியுறுத்தினார்.

தொடர்ந்து, இங்கிலீஷ் காய்கறி கண்டி, பூ மார்க்கெட், மீன் மார்க்கெட், வெங்காய  மண்டி உள்ளிட்ட இடங்களிலும் வியாபாரிகள், தொழிலாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள், பொதுமக்களிடம் கருப்பையா ஓட்டு சேகரித்து பேசியதாவது: அதிமுக வேட்பாளராக போட்டியிடும் நான் உங்களைப்போன்று எளிய குடும்பத்தில் பிறந்தவன். அதனால், ஒரு வியாபாரியின் மனநிலை, கஷ்டங்கள் என அனைத்தையும் அறிந்தவன். எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், எந்த விஷயத்திலும் எப்போதும், இந்த கருப்பையா வியாபாரிகளின் பக்கம் தான் உறுதியாக நிற்பேன். காந்தி மார்க்கெட்டுக்காக கள்ளிக்குடியில் ஒரு மார்க்கெட் கட்டப்பட்டுள்ளது. இப்போது பஞ்சப்பூரில் மீண்டும் ஒரு மார்க்கெட் கட்டப்போவதாக கூறியுள்ளனர். அது எப்போது வரும் என்று தெரியவில்லை.

இவ்விஷயத்தில் வியாபாரிகள் அனைவரையும் அழைத்துப்பேசி, அவர்களது கருத்தைக் கேட்டு அதனடிப்படையில், வியாபாரிகள், வியாபாரம் பாதிக்கப்படாத வகையில் அரசு சார்பில் முடிவு எடுக்க வலியுறுத்துவேன். அதேசமயம், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க என்ன வழிவகை செய்ய வேண்டும், அதற்கான உங்கள் ஆலோசனைகளை கேட்டறிந்து நடைமேம்பாலம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும். இங்குள்ள அனைத்து வியாபாரிகளுக்கும் பல்வேறு பிரச்சனைகள் உள்ளது. அவற்றை தீர்க்க, உங்களுடன் இருந்து உங்களுக்காக குரல் கொடுப்பேன் என உத்தரவாதம் அளிக்கிறேன்.

திருச்சியில் அதிமுகவுக்கு என்று எந்தவொரு மக்கள் பிரதிநிதியும் இல்லை. அதனால், உங்கள் குறைகளை நீங்கள் எங்கு சொன்னாலும் ஆளுங்கட்சியில் ஒரே இடத்திற்கு சென்று, அவர் மட்டும் தான் முடிவெடுப்பார். ஆனால், எம்பியாக என்னை தேர்ந்தெடுத்தால், உங்கள் குரலாக, உங்களுக்கு ஆதாரவாக, வியாபாரிகளின பிரதிநிதியாக, வியாபாரிகளின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில்  போராடுவேன். அதற்கு நீங்கள் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெறச் செய் வேண்டும்’’, என்றார்.

நிகழ்ச்சியில், மாநகர் மாவட்ட கழக செயலாளர் சீனிவாசன், அதிமுக அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், திருச்சி வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான்,மாவட்ட மாணவர் அணி செயலாளர் என்ஜினியர் இப்ராம்ஷா,பகுதி செயலாளர்கள் சுரேஷ் குப்தா, ரோஜர் , திருச்சி வெங்காய தரகு மண்டி வர்த்தக சங்கத்தின் தலைவர் வெள்ளையப்பன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட பொருளாளர் வெங்காய மண்டி தங்கராஜ், மாநில துணைத்தலைவர் கந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். பின் திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையா ஜமாத்துல் உலமா சபை  திருச்சி மாவட்ட தலைவர்.மௌலானா இமாம் ரூஹூல் ஹக் கை  சந்தித்தார்.

இந்த நிகழ்வில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி, மாவட்டத் துணைத் தலைவர் பிச்சைக்கனி, மாவட்ட செய்தி தொடர்பாளர் பக்ருதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முபாரக் அலி, அதிமுக நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.