Unidentified persons cheated old man

சென்னை அடையாறு இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் 80 முதியவர் நடராஜன். இவர் திண்டிவனம் அடுத்துள்ள நொளம்பூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு மீண்டும் சென்னை திரும்புவதற்காக திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பஸ்ஸுக்காக நேற்று காத்திருந்தார். அப்போது, அவரிடம் 2 மர்ம நபர்கள் நெருங்கிநின்று, நயமான முறையில் பேச்சுகொடுத்துள்ளனர்.

Advertisment

அந்த 2 மர்ம நபர்களும் தங்க நிற முலாம் பூசப்பட்டு அதில் கற்கள் பதித்த போலி நகையைக் காட்டி, இந்த நகை ரூ.40 லட்சம் மதிப்புள்ளது. இந்த நகை இங்கே யாரும் வாங்க மாட்டார்கள். தற்போதைக்கு, இந்த 40 லட்ச ரூபாய் மதிப்பிலான நகையை நீங்கள் வைத்துக்கொண்டு, அதற்குப்பதிலாக நீங்கள் அணிந்திருக்கும் நகையைக் கழற்றிக் கொடுங்கள். நீங்கள் அணிந்திருக்கும் நகை சில ஆயிரம் ரூபாய் மதிப்பு இருக்கும் இந்த நகையை 40 லட்சம் ரூபாய் மதிப்பிலானது. நீங்கள் சென்னை சென்று இதை நகைக்கடையில் விற்று பணமாகக் கூட மாற்றிக் கொள்ளலாம் எனப் பலவிதமான ஆசை வார்த்தைகளைக் கூறி பெரியவரை மயங்க வைத்துள்ளனர்.

Advertisment

அவர்களின் பேச்சை நம்பி முதியவர் நடராஜன், தன் கையில் அணிந்திருந்த 6 பவுன் கைகாப்பு, கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் செயின் ஆகியவற்றை மர்ம நபர்களிடம் கழற்றிக் கொடுத்துவிட்டு, அவர்கள் வைத்திருந்த கற்கள் பதித்த போலி நகையை வாங்கியுள்ளார். அதற்குள் அந்த மர்ம நபர்கள் மாயமாகி விட்டனர். பெரியவர் நடராஜன், மனதில் சந்தேகம் தோன்றவே அங்கிருந்த ஒரு நகைக்கடையில் கொண்டுசென்று,அதைக் காட்டி இது உண்மையா என்று கேட்டுள்ளார். அவர்கள் அதைச் சோதனை செய்து பார்த்துவிட்டு, இது போலி நகை என்று கூறி உள்ளனர்.

அப்போதான் நடராஜனுக்கு அந்த மர்ம நபர்கள் தன்னை ஏமாற்றியது தெரிய வந்தது. இதையடுத்து நடராஜன், திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, போலி நகை கொடுத்து ஏமாற்றிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

Advertisment

cnc

வயதானவர்களிடம் எப்படியெல்லாம் ஏமாற்ற முடியுமோ அப்படியெல்லாம் ஆசை வார்த்தைக் கூறி ஏமாற்றும் கும்பல் விழுப்புரம் மாவட்டத்தில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.