Skip to main content

“இது நியாயமற்றது”... தமிழக அரசின் உத்தரவை விமர்சித்த அன்புமணி !

Published on 02/04/2022 | Edited on 02/04/2022

 

"This is unfair .. Tamil Nadu government should withdraw .." - Anbumani!

 

தமிழ்நாட்டில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் சொத்துவரி 150% வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்துவரி உயர்வு நடைமுறைக்கு வந்து விட்ட நிலையில், மாநகராட்சிகளில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு நடைமுறைக்கு வரவிருக்கிறது. இது நியாயமற்றது!


பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு, மருந்துகள் விலை உயர்வு, சுங்கக்கட்டணம் உயர்வு ஆகியவற்றால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், சொத்து வரியும் உயர்த்தப்பட்டால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். மக்கள் மீது தாங்க முடியாத சுமைகளை சுமத்தக்கூடாது. சொத்துவரி உயர்வு சொத்து வைத்திருப்பவர்களை மட்டும் பாதிக்காது. வாடகை உயர்வு என்ற பெயரில் ஏழை மக்களையும் பாதிக்கும். இவற்றைக் கருத்தில் கொண்டு நகரப்பகுதிகளில் சொத்துவரி உயர்வை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும். பொருளாதார சுமையிலிருந்து மக்களைக் காக்க வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்