Skip to main content

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைந்தது!

Published on 02/08/2021 | Edited on 02/08/2021

 

'Unemployment rate in Tamil Nadu is low!'

 

தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த ஜூலை மாதத்தில் 4.8% சதவீதமாகக் குறைந்துள்ளது என்று இந்திய பொருளாதாரத்தை ஆய்வுசெய்யும் நிறுவனமான 'CMIE' கணித்துள்ளது. இதுவே, கடந்த ஜூன் மாதத்தில் தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.3% ஆக இருந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த மாநிலங்களின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 9.17%இல் இருந்து 6.95% ஆக குறைந்துள்ளது. 

 

குறிப்பாக, இந்தியாவில் நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.30% ஆகவும், கிராமப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.34% ஆகவும் குறைந்துள்ளது. பொது முடக்க தளர்வுகளைத் தொடர்ந்து பல்வேறு துறை நிறுவனங்களும் செயல்பட தொடங்கியதே வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைய காரணமாகக் கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்