தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று கொண்டிருக்கிறது. இரண்டு சீசன்களை போலவே மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா மற்றும் கஸ்தூரி இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

Advertisment

big boss

இதனையடுத்து சேரன், ஷெரின், கவின், லாஸ்லியா, சாண்டி ஆகியோர் இந்தவாரம் எவிக்சன் லிஸ்டில் உள்ளனர். மேலும் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நடக்கும் டாஸ்க்குகளில் எந்த போட்டியாளர் வெற்றி பெறுகிறரோ அவர் நேரடியாக இறுதி சுற்றுக்கு செல்வார் என்றும் பிக் பாஸ்ஸில் கூறியுள்ளனர். இந்த நிலையில் டாஸ்க்குகளில் போட்டியாளர்கள் பெற்ற புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளனர். அதில் கவின் கடைசி இடத்திலும், அதற்கு அடுத்த படியாக லொஸ்லியா, சேரன், தர்சன் ஆகியோர் உள்ளனர். இரண்டம் இடத்தில் சாண்டியும், முதல் இடத்தில் முகேனும் உள்ளனர். ஆரம்பத்தில் தர்சன் சிறப்பாக விளையாடி முதலிடத்தில் இருந்தாலும் இறுதியாக முகேன் புள்ளிபட்டியலில் முதலிடத்தை பிடித்து நேரடியாக இறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ய்ப்பை பெற்றுள்ளார் என்று கூறிவருகின்றனர்.