Advertisment

உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு... முதலமைச்சர் காரை படமெடுத்த பத்திரிகையாளர்கள் சிறைபிடிப்பு!!

ulunthurpettai incident

Advertisment

இன்று மாலை சென்னையிலிருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிசேலம் சென்று கொண்டிருந்தார். அவர் இவ்வழியே வரும்போதும், போகும்போதும் கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு கார்களுடன் வரவேற்பு கொடுப்பது வழக்கம். இன்றும் அதேபோல் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே முதல்வர் வருகையின்போது பத்திரிகை ஊடகத்தினர் காத்திருந்தனர்.

முதல்வரின் கார் பலத்த பந்தோபஸ்துடன் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் நிற்காமல் சேலம், திருச்சி சாலை பிரிவு ரவுண்டானா அருகில் நின்றது.காரில் இருந்து இறங்கி ஏற்கனவே அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்போடு நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு காரில் ஏரி சேலம் நோக்கி புறப்பட்டார். மிகுந்த பாதுகாப்போடு வரும் முதல்வர் உளுந்தூர்பேட்டை அருகே கார் மாறும் தகவல் பத்திரிகை ஊடகத்தினருக்கு தகவல் கிடைக்கவே முதல்வரின் காரை பின்தொடர்ந்து சென்று கார் மாறும்போது படமெடுக்க தயாராக நின்றனர்.

முதல்வர் கார் மாறும் இடத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி ஜெயச்சந்திரன், உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி விஜயகுமார், இன்ஸ்பெக்டர் எழிலரசி மேலும் ஏகப்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருந்தனர். முதல்வர் கார்மாறும் சமயத்தில் புகைப்படம் எடுக்க தயாராக நின்ற பத்திரிகையாளர்களை பார்த்ததும் காவல்துறையினருக்கு கடும் கோபம் ஏற்பட்டுள்ளது.இங்க யாரும் இருக்கக்கூடாது, படம் எடுக்கக்கூடாது,வீடியோ எடுக்கக்கூடாதுஎனசத்தமிட்டபடியே 3 பத்திரிகைஊடகத்தினரைகுண்டுக்கட்டாக தூக்கிச் சென்று அருகில் இருந்த ஒரு கட்டிடத்தில் உள்ளே அடைத்து வைத்து பூட்டி விட்டனர்.

Advertisment

சுமார் 20 நிமிடம் கழித்து அவர்களை வெளியே விட்டுள்ளனர். பரபரப்பாக வாகனங்கள் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் முதல்வர் கார் மாறிய காட்சியை படம் எடுத்தில் என்ன தவறு, முதல்வர் சென்னையிலிருந்து வந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் எங்கு சென்றது என்று தெரியவில்லை என்கிறார்கள் இந்த காட்சியை வேடிக்கை பார்த்த பொதுமக்கள். முதலமைச்சர் பயணம் செய்தகாரில் இருந்து வழியில் திடீரென்று நிறுத்தி கீழே இறங்கிவேறு ஒரு கார் மாறிய சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இடத்தில் அரசியல் கட்சியினர் யாரும் இல்லை வேறு சில மனிதர்கள் கரை வேட்டியுடன் நின்றுள்ளனர்.

போலீஸ் அதிகாரிகள் படம் எடுக்க முயன்ற பத்திரிகை, ஊடகத்துறையினரைதூக்கி சென்று சிறை வைக்கும் அளவிற்கு அங்கு என்ன நடந்தது. அந்த இடத்தில் பத்திரிகை ஊடகத்தினரைபார்த்ததும் போலீசாருக்கு அவ்வளவு கோபம் வர வேண்டிய அவசியம் என்ன.பொதுவெளியில் முதலமைச்சர் ஒரு காரில் இருந்து மற்றொரு காரில் மாறும்போது படம் எடுப்பது அவ்வளவு பெரிய குற்றமா அது என்ன அவ்வளவு பெரிய மர்மம் புதைந்துள்ளது இப்படி மக்கள் பரபரப்பாக விவாதித்து வருகிறார்கள்.

Chennai edappadi pazhaniswamy
இதையும் படியுங்கள்
Subscribe