Published on 04/02/2020 | Edited on 04/02/2020
உளுந்தூர்பேட்டை பகுதியில் இருந்து, விருத்தாசலத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில், ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இக்கல்லூரிக்கு மாணவர்கள் உளுந்தூர் பேட்டையில் இருந்து அரசு நகரப் பேருந்தில் காலை ஏழு முப்பது மணிக்கு செல்வது வழக்கம்.

இந்த நகரப்பேருந்து உரிய நேரத்தில் இயக்கப்படாததால் உளுந்தூர்பேட்டையில் கல்லூரி மாணவர்கள் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் செவ்வாய்க்கிழமை காலை உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த மாணவர்கள் உரிய நேரத்தில் பேருந்து வராததால், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதே நேரத்தில் கூடுதலாக நகரப் பேருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். உளுந்தூர்பேட்டை போலீசார் மாணவர்களை சமாதானபடுத்தி மறியலை கைவிட செய்தனர்.