Ulunderpet youngster who made trouble in court

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நன்னாவரம் கிராமம், அவ்வூரைச் சேர்ந்தவர் ராஜாராமன். இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த அவரது உறவினர்களுக்கும் இடையே சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக திருநாவலூர் போலீசார், ராஜாராமன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Advertisment

இதையடுத்து அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். அதற்கான உத்தரவு கடிதத்தை காவல் நிலையத்தில் கேட்டுள்ளனர். இதையடுத்து ராஜாராமன் ஜாமீன் உத்தரவு நகல் வாங்குவதற்காக உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்திற்கு சென்றார். அங்கு விசாரித்தபோது அவரது ஜாமீன் நகல் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமும் வேதனையும் அடைந்த ராஜாராம், திடீரென்று தன் உடலில் டீசலை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார். நீதிமன்ற பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அவரை உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

Advertisment