j

உள்ளாட்சி தேர்தலை 2017ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி செப்டம்பர் 18ஆம் தேதிக்குள் அறிவிப்பாணை வெளியிட நடவடிக்கை எடுக்காத மாநில தேர்தல் ஆணையர் மாலில் பெரோஸ்கான், செயலாளர் ராஜசேகரன் ஆகியோருக்கு எதிராக திமுக சார்பில் அதன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

Advertisment

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், எம்.சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது " மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகி வாதாடினர் " ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் வார்டு மறுவரையறை பணிகள் முடிக்கப்பட்டு விடும் எனவும், அதை அரசுக்கு பரிந்துரைப்போம் என்றும், அதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்த பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் என திட்டவட்டமாக தெரிவித்தார். வார்டு மறுவரையறை செய்யாமல் தேர்தலை நடத்த முடியாது என தெரிவித்ததுடன், 1991 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தேர்தலை நடத்த அனுமதி அளிக்கும் சட்டப்பிரிவை அரசு ரத்து செய்துள்ளதால் தேர்தல் ஆணையத்தின் கைகள் கட்டி போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Advertisment

அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், "தமிழகத்தில் தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் எந்த வார்டும் முறையாக இல்லை என்றும், வார்டு மறுவரையறை செய்யாமல் உள்ளாட்சி தேர்தலை நடத்த கூடாது என்று திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்துள்ளது எனவும், வார்டு மறுவரையறை முடித்தால் அதற்கு ஒப்புதல் அளித்து, இடஒதுக்கீட்டின் படி பிரிக்க அரசுக்கு அவகாசம் தேவைப்படும்" என தெரிவித்தார்.

அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள், ஆணையம் அறிக்கை அளித்த பின் எவ்வளவு நாட்களில் அரசு ஒப்புதல் அளிக்கும் அவகாசத்தை அரசு முடிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். ஆனால் அறிக்கை தாக்கல் செய்த பின்னர்தான் ஒப்புதலுக்கான காலகெடுவை நிர்ணயிக்க முடியும் என அரசு தரப்பு வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

Advertisment

இதனை கேட்டு அதிருப்தி அடைந்த நீதிபதிகள், ஏற்கனவே போதுமான கால அவகாசம் வழங்கபட்டுள்ளதாகவும், 2016 நடத்த வேண்டிய தேர்தல் இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் நடத்தபடவில்லை எனவும், இதே நிலை நீடித்தால் 2019ஆம் ஆண்டிற்குள் கூட தேர்தலை நடத்தி முடிக்க மாட்டீர்கள் போல உள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர்.இதையடுத்து வழக்கு விசாரணை நாளைய தினத்திற்கு ஒத்திவைத்த நீதிபதிகள், திமுக தரப்பு நாளை தங்கள் தரப்பு வாதங்களை வைக்க உள்ளனர்.