Advertisment

பள்ளிப் பருவத்திலேயே நம்முடைய வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. இதற்காகவே புதுக்கோட்டையில்'உலா' என்ற அமைப்புஅரசுப் பள்ளி மாணவர்களை வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்கள், கோட்டைகள் என அழைத்துச் சென்று வருகின்றனர்.

கடந்த மாதம் பார்வையற்றோர் பள்ளி மாணவர்களை உணர்திறன் சுற்றுலா அழைத்துச் சென்று மகிழ்வித்தனர். அதேபோல தற்போது மரிங்கிப்பட்டி அரசுப் பள்ளி நிர்வாகத்தின் அனுமதியோடு பள்ளி மாணவ, மாணவிகளை நீர் மேலாண்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கவிநாடு கண்மாய், அந்த கவிநாடு கண்மாய்க்கே தண்ணீர் வரும் சேந்தமங்கலம் அணைக்கட்டு ஆகியவற்றை பார்க்க வைத்ததோடு தமிழர்களின் தொன்மை வரலாற்றை அறிந்துகொள்ள நார்த்தாமலை விஜயாலய சோழீஸ்வரம் அழைத்துச் சென்று சுற்றிக் காட்டினார்கள். ஒவ்வொரு மாதமும் ஒரு அரசுப் பள்ளி மாணவர்களை இப்படியான சுற்றுலா அழைத்துச் செல்வதே உலாவின் நோக்கம் என்கிறார்கள். ஏற்பாடுகளை புதுகை செல்வா, வீரா, ப்ரீத்தி, ஷேக் ஆகியோர் செய்திருந்தனர்.