உக்ரைன் போர்... விண்ணைத்தொடும் தங்க விலை!

ukraine

ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. . ரஷ்யாவின் தாக்குதலை அடுத்து ரஷ்யாவுடனான தூதரக ரீதியிலான உறவை உக்ரைன் துண்டித்துள்ளது. ரஷ்ய ராணுவத்தின் தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட உக்ரைன் நாட்டு ராணுவ வீரர்கள் இறந்துள்ளதாகவும், தாங்கள் நடத்திய பதில் தாக்குதலில் ரஷ்யாவை சேர்ந்த ஆக்கிரமிப்பாளர்கள் 50 பேர் கொல்லப்பட்டதாகவும் உக்ரைன் அறிவித்துள்ளது.

 Ukraine war ... skyrocketing gold prices!

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க இந்திய வெளியுறவுத்துறை தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் உக்ரைனில் நிலவும் போர் பதற்றம் காரணமாக பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனையில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீதான இந்த போர் பதற்றம் காரணமாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவைக் கண்டுள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 109 காசுகள் குறைந்து ரூபாய் 75.70 ஆக சரிவைக் கண்டுள்ளது. அதேபோல் தங்கத்தின் விலை உச்சத்தைத் தொட்டுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,856 ரூபாய் உயர்ந்து 39,608 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 232 ரூபாய் உயர்ந்து 4,951 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து 72.70 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

Russia Ukraine
இதையும் படியுங்கள்
Subscribe