Ukraine War; DMK neighborhood team thanks CM for rescuing students!

Advertisment

இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் திமுக மாவட்ட அயலக அணி அமைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமையில், மாவட்ட துணை அமைப்பாளர் முகம்மது ஹனிபா முன்னிலையில் அயலக அணி கூட்டம் நடைபெற்றது.

இதில் ரஷ்யா, உக்ரைன் உச்சக்கட்ட போரில் தமிழக மாணவர்களை தாயுள்ளத்தோடு மீட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், மாநில அயலக அணிச் செயலாளர் அப்துல்லா எம்.பி.க்கும், இராமநாதபுரம் மாவட்ட கழக பொருப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கத்திற்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இதில் அயலக அணி துணை அமைப்பாளர் கார்த்திகேயன், செல்வராஜ், அப்துல் காதர் என்ற ஜான் மரைக்காயர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கீழக்கரை நகர்மன்ற துணைத்தலைவர் ஹமீதுசுல்தான், பரமக்குடி சமூக வலைதளப் பொறுப்பாளர் ஜோசப் குழந்தைராஜா, மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் அப்துல் ஜலில், கீழக்கரை நகரசெயலாளர் கென்னடி, நகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கெஜி, சுபியான், எபன், நயிம், நகர் மன்ற உறுப்பினர் பயாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.