Advertisment

உக்ரைன்: தமிழ்நாடு மாணவர்களுக்கான அவசர கட்டுப்பாட்டு மையம் (படங்கள்)

ரஷ்யா, உக்ரைன் மீது தொடுத்துள்ள போரால் உலகம் முழுக்க பதட்டநிலையில் இருக்கிறது. தற்போது உக்ரைனில் 20,000 இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளனர். இதில் தமிழ்நாட்டு மாணவர்களும் ஏராளமானோர் உள்ளனர். இவர்களை மீட்க இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் மும்முரமாக செயல்பட்டுவருகிறது. தற்போது, உக்ரைனிலிருந்து மாணவர்களை ருமேனியாவுக்கு சாலை மார்க்கமாக அழைத்துவந்து அங்கிருந்து விமான மூலம் இந்தியாவுக்கு அழைத்துவர அரசு முடிவு செய்துள்ளது. அதேசமயம், தமிழ்நாடு மாணவர்கள் தாயகம் திரும்புவதற்கு ஆகும் செலவை தமிழ்நாடு அரசு ஏற்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.

Advertisment

அதேசமயம், மாணவர்களுக்கு தேவைப்படும் உதவிகளையும், தகவல்களை பெறவும் தமிழ்நாடு அரசு அவசர கட்டுப்பாட்டு மையத்தை துவங்கியுள்ளது. சென்னை, எழிலகத்தில் இது துவங்கப்பட்டுள்ளது. தற்போதுவரை 900க்கும் அதிகமான தமிழ்நாடு மாணவர்கள் தொடர்புகொண்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் பொது மக்கள் அவசரத்திற்கு 9445869848 என்ற வாட்ஸ்அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

mk stalin Russia Ukraine
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe