
உக்ரைன் தலைநகர் கியூவ் நகரில் உள்ள மழலையர் நர்சரி பள்ளி அருகே நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில் உக்ரைன் நாட்டின் உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி மற்றும் 3 குழந்தைகள் உட்பட மொத்தம் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து உக்ரைன் நாட்டின் காவல் துறையின் தலைமை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், "அரசின் சார்பில் அவசர சேவைக்கு பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த நாட்டின் உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, நாட்டின் முதன்மை துணை அமைச்சர் யெவ்ஜெனி யெனின், கிளிவ் மாகாண ஆளுநர் ஒலெக்ஷ்ய், உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட மொத்தம் 18 பேர் இதுவரை இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்து உள்ளனர், மேலும் 15 குழந்தைகள் உட்பட 29 பேர் இந்த விபத்தில் காயமடைந்து உள்ளனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் செய்யப்பட்டுள்ளன. விபத்து நடைபெற்ற இடத்தில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன" தெரிவிக்கிறது.
இந்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ காட்சி ஒன்று பார்ப்பவர்களின் மனதை பதைபதைக்க வைக்கிறது.