Advertisment

தமிழகத்தை உலுக்கிய கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்; குற்றப்பத்திரிகை தாக்கல்

Ukkadam car cylinder explosion incident that rocked Tamail Nadu; Filing of charge sheet

கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த வருடம் அக்டோபர் 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று வெடித்துச் சிதறியது. காரில் இருந்த ஜமேசா முபீன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Advertisment

தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் இது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் இந்த வழக்கானது என்.ஐ.ஏ எனும் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுவிசாரணையானது தொடர்ந்து நடைபெற்று வந்ததது. தற்போது வரை இதில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களைஇருமுறை காவலில் எடுக்கப்பட்டு பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

Advertisment

இந்நிலையில் இந்த சம்பவத்தின் விசாரணை தொடர்பான குற்றப்பத்திரிகை பூந்தமல்லி நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பூந்தமல்லியில் இருக்கக்கூடிய என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சுமார் 50 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். ஜூன் மாதத்தின் இறுதியில் இந்த சம்பவம் தொடர்பான முழுமையான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என என்.ஐ.ஏ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIA cylinder car
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe