'' Ugadi Greetings on Dravidian Language Family Relations '' - Stali

Advertisment

இன்று (13.04.2021) தெலுங்கு வருடப்பிறப்பானயுகாதி நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ''திராவிட மொழிக்குடும்பஉறவின் அடையாளமான தெலுங்கு, கன்னட மொழி மக்களுக்கு உகாதி வாழ்த்துகள். மொழி, பண்பாடு கூறுகளைப் பாதுகாத்து ஆதிக்கத்திற்கு இடமின்றி அன்பால் இணைந்துசகோதரத்துவம் காத்திடுவோம்'' எனதெரிவித்துள்ளார்.

இதேபோல், துணை முதல்வர் ஓபிஎஸ் யுகாதி நாளுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகஅவர், தனது டிவிட்டர்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''தெலுங்கு வருடப்பிறப்பாம் யுகாதி திருநாளை உவகையோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி மகிழும் தெலுங்கு மற்றும் கன்னடம் மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ‘யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை’அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.