Udumalai Shankar case to be heard day after tomorrow

Advertisment

உடுமலை சங்கர் கொலை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் நாளை மறுநாள் உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது.இந்தவழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்எம்.சத்தியநாராயணன், நிர்மல்குமார்அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கவுள்ளது.

இருவேறு சமூகத்தை சேர்ந்த கௌசல்யாவும்,சங்கரும் 2015-ல் திருமணம் செய்து கொண்டனர். 2016 மார்ச் 13-ல் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் சங்கர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

கௌசல்யா தந்தை உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.தண்டனையை எதிர்த்து 6 குற்றவாளிகளும், மூன்று பேர் விடுதலையை எதிர்த்து காவல்துறையும் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கில் நாளை மறுநாள் உயர் நீதிமன்றம்தீர்ப்பு வழங்கவுள்ளது.