சென்னை பள்ளிக்கரணை பகுதியில் சாலை ஓரம் வைக்கப்பட்டு இருந்த பேனர் சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது விழுந்து போது பின்னே வந்த லாரி மோதி சம்பவ இடத்திலே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

Advertisment

udhayanithi at subhasree home

இச்சம்பவம் அனைவரின் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் என்று பலரும் தங்களுக்கு பேனர் வைக்க வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டு வருகிறார்கள். நீதிமன்ற உத்தரவை அடுத்து சாலையோரம் உள்ள பேனர்களை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுநர் மனோஜ் கைது செய்யப்பட்டார். அதோடு, பேனர் அடித்த அச்சகத்திற்கும் சீல் வைக்கப்பட்டது. மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், குரோம்பேட்டையில் உள்ள சுபஸ்ரீ வீட்டிற்கு சென்று அவரின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த நிலையில் தற்போது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.