Advertisment

உதயநிதி ஸ்டாலின் தென் சென்னையில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் 

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் தி.மு.க.வினர் விருப்ப மனு கொடுக்கலாம் என்று கட்சியின் தலைமை அறிவித்தது. கடந்த ஒரு வாரமாக இதற்கான மனுக்கள் அறிவாலயத்தில் வினியோகம் செய்யப்படுகிறது.

Advertisment

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளான இன்று விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை கழக நிர்வாகி துறைமுகம் காஜா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

Advertisment

இன்று மதுரை பாராளுமன்ற தொகுதிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. வேலுசாமி, முன்னாள் மேயர் குழந்தைவேலு, சரவணன், தளபதி ஆகியோர் விருப்ப மனு கொடுத்தனர். அன்பு செழியன், தண்டபாணி ஆகியோர் கோவை தொகுதிக்கும், ராசையா தென்காசி தொகுதிக்கும் விருப்ப மனு கொடுத்தனர்.

Udhayanidhi Stalin

உதயநிதி ஸ்டாலின் தென் சென்னை தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் சந்திரபாபு கொடுத்தார். தென் சென்னையில் போட்டியிட கவிஞர் காசி முத்துமாணிக்கம் மனு கொடுத்தார். பொள்ளாச்சி தொகுதிக்கு வக்கீல் மனோகரன், வரதராஜன் ஆகியோர் விருப்ப மனு கொடுத்தனர். தொடர்ந்து விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன. வருகிற 7-ந்தேதி வரை விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம்.

elections parliment Udhayanidhi Stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe