Advertisment

திமுகவின் மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கிய அமைச்சர் உதயநிதி 

udhayanidhi stalin theni dmk members

Advertisment

தமிழ்நாடு முழுவதும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் பயணிக்கின்ற மாவட்டங்கள் தோறும்திமுகவின் மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கி அவர்களின் கட்சிக்கு உழைத்த உழைப்பினை அங்கீகரித்தும் வருகிறார் அமைச்சர் உதயநிதி.

அந்த வகையில், கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு தேனி தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களை சேர்ந்த திமுகவின் 1000 மூத்த முன்னோடிகளைத் தேர்வு செய்து தலா ரூ.10,000 ரூபாய் வழங்கினார். இதற்கான நிகழ்வு தேனி மாவட்டத்தின் கம்பத்தில் இன்று நடந்தது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், "கழகத்தின் வளர்ச்சிக்காக தன்னலம் பாராமல் உழைத்த, கழக மூத்த முன்னோடிகளின் நலனை காக்கின்ற வகையில், அவர்களுக்கு எப்போதும் துணை நிற்க வேண்டும் " என்று அறிவுறுத்தியதன் அடிப்படையில் இந்த பொற்கிழி வழங்கும் நிகழ்வினை நடத்தி வருகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe