Udhayanidhi Stalin thank CM MK Stalin

திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் இன்று (ஜன. 21) நடக்கிறது. இதையொட்டி கோட்டை கொத்தளம் போன்ற அலங்கார நுழைவு வாயில், பிரம்மாண்ட பந்தல் என விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திமுக இளைஞரணி முதல் மாநில மாநாடு கடந்த 2007ம் ஆண்டு நெல்லையில் நடந்தது. இந்நிலையில், இரண்டாவது மாநில மாநாடு சேலத்தை அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று (ஜன. 21) நடக்கிறது. திமுகவின் எழுச்சிப் படையாகக் கருதப்படும் இளைஞரணிக்கு 17 ஆண்டுகள் கழித்து நடைபெறும் மாநாடு என்பதால் திமுகவினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கழக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டை நடத்த வாய்ப்பளித்து வாழ்த்தியுள்ள கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் அன்பும் நன்றியும்” என பதிவிட்டு, முதல்வர், தி.மு.க. இளைஞர் அணியின் வரலாற்றை பற்றி விளக்கும் காணொளியையும் இணைத்துள்ளார். அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், “இன்று இளைஞர் அணியை வழிநடத்த உங்களுக்கு உதயநிதி கிடைத்திருக்கிறார். அவரை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள்” என்று பேசியுள்ளார்.

Advertisment