சென்னை மூலக் கொத்தளத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகளான நடராசன் மற்றும் தாளமுத்து ஆகியோரின் நினைவுச் சின்னத்திற்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார். இந்நிகழ்வில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.