





Published on 31/12/2022 | Edited on 31/12/2022
மகளிர் சுயஉதவிக் குழுக்களின் தயாரிப்புகள் அடங்கிய பொங்கல் பரிசுப் பெட்டகங்கள் தமிழகத்தின் அனைத்துப் பகுதி மக்களையும் சென்றடையும் வகையில், இணையதளம் மூலம் விற்பனை செய்யும் திட்டத்தை நுங்கம்பாக்கம் அன்னை தெரசா வளாகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (30.12.2022) தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மத்திய சென்னை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை நகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார், அமுதா ஐ.ஏ.எஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.